Tamil Language
தமிழ்மொழித் துறை (Tamil Language Group)
ஹவ்காங் தொடக்கப்பள்ளியில் கடின உழைப்பும் தன்முனைப்பும் கொண்ட நான்கு திறன்மிக்க தமிழாசிரியர்கள் இருக்கிறோம். மாணவர்கள் கல்வியின் உள்ளகம் என்பதை மனத்தில்கொண்டு நாங்கள் மாணவர்களுக்கு ஆற்றல்மிக்க, அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களை உருவாக்கிக் கொடுப்பதை தலையாயப் பணியாகக் கருதுகிறோம். வலுவான பாடத்திட்டத்தை முதன்மையாகக் கருதி, மாணவர்களை மையமாகக் கொண்டு, பல பாடங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை மாணவர்களின் பண்புநல வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகின்றன. எங்கள் பள்ளியின் தத்துவச் சிந்தை – ஒன்றுசேர்ந்து மாணவர்களின் திறனை வெளிக்கொணர்தல் – எனும் நோக்கில், மாணவர்களிடையே தமிழார்வத்தைத் தூண்ட, தமிழ்த்துறை புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.
Hougang Primary’s Tamil Language group comprises four dedicated, determined and dynamic Tamil teachers who have our students at the heart of education and believe that students should be provided with powerful and meaningful learning experiences that will aid in their holistic development. With a robust and rigorous curriculum at the forefront, our Tamil teachers champion the character development of our students through engaging them in student-centric lessons and a myriad of programmes, inculcating in them values and a sense of purpose in life. In line with our school philosophy- Bringing out the Best in Every Child, Together- the Tamil Language Group has been assuming interesting and invigorating initiatives to cultivate and sustain in students the interest of learning Tamil Language, and uncovering their fullest potential. Some of the key initiatives are as follows:
வாசிப்பு செயல்முறைத்திட்டம் (Reading Programme)
தொடக்கநிலை ஒன்று முதல் நான்கு வரையிலுள்ள மாணவர்களுக்கு அகன்ற வாசிப்பு நடத்தப்படுகிறது. மாணவர்கள் மகிழ்வூட்டும் வாசித்தலை மேற்கொள்ளவும், சீராக, சரளமாக வாசிக்கவும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் கதைநூலையும், அதையொட்டிய மாணவ நடவடிக்கை தொகுப்பையும்கொண்டு நாம் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கிறோம். தொடக்கிநிலை மூன்று, நான்கு மாணவர்கள் சுயமாகத் தங்களுக்கு விருப்பமான வாசிப்பு வளங்களைத் தேர்வுசெய்து, வெவ்வேறு படைத்தல் முறைகளைக்கொண்டு, தாங்கள் படித்தவற்றை வகுப்பில் பகிர்வர். ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்ட செய்தித்தாள் துணுக்குகள், சஞ்சிகைகளில் இடம்பெறும் சிறுகதைகள் போன்ற துணைவளங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கற்றலை ஊக்குவிக்கிறது.
தொடக்கநிலை ஐந்து, ஆறு மாணவர்களுக்கு ஆழ்நிலை வாசிப்பு நடத்தப்படுகிறது. பனுவலை ஆழமாகவும், கவனமாகவும் வாசித்து, அதில் மறைமுகமாகப் பொதிந்திருக்கும் கருத்துகளைக் கண்டறிவதே இச்செயல்முறைத்திட்டத்தின் நோக்கமாகும். ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பனுவல்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தாங்கள் படித்தவற்றைச் சுருக்கி வரைவர். இதன்மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறனும், சொல்வளமும், இலக்கண அறிவும் மேம்படுகின்றன.
Extensive reading programme is carried out for our lower primary and middle primary students. The aim of conducting the extensive reading programme is to encourage students to read for pleasure, and to develop reading speed and fluency. The programme consists of effective use of the Small Readers and teacher-designed supplemental Reading Journals to be used alongside Small Readers. Middle primary students are tasked with selecting their reading materials themselves. They read and share their Reading Reflections in class via various presentation modes in a bid to promote the books they have read. Supplementary reading materials such as short stories, and articles from magazines and newspapers are also provided for students to read beyond the classroom.
Intensive reading programme is carried out for our upper primary students. This is an approach wherein students read the text carefully and deeply so as to understand the text in its entirety, and to grasp the literal meaning of the text. The text is carefully selected by teachers, and it involves summary writing, a process that enables students to acquire reading skills, vocabulary, and grammatical knowledge.
சொற்போர் (Debate)
2019-ஆம் ஆண்டில், தேசிய அளவில் நடந்தேறிய விவாதப் போட்டியில் (சொற்போர்) ஹவ்காங் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாபெறும் வெற்றியைத் தழுவினர். அதைத் தொடர்ந்து, திறனாய்வுச் சிந்தனை, பொதுப் பேச்சுத் திறன், விவாதத் திறன் போன்றவற்றை மாணவர்களிடையே வளர்க்க நாங்கள் முற்படுகிறோம். கடுமையான தேர்வுமுறையைக்கொண்டு, நாங்கள் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, சொற்போர் குழுவை உருவாக்குகிறோம். மாணவர்கள் போட்டி நடைபெறுவதற்கு ஒரு வருட காலத்திற்கு முன்பே விவாதத் திறனை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இவற்றின் மூலம் மற்றவர்களின் உணர்வுகளை உணர்ந்து செயல்படுவது, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, உலக நடப்புகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்திக்கொள்வது போன்றவற்றை மாணவர்களிடையே வளர்க்க நாங்கள் விழைகிறோம்.
After the monumental winning of Hougang Primary’s Tamil students in the National Tamil Debate Competition in 2019 where they were awarded the Champion Trophy, the Tamil teachers have carried on the spirit of teaching and learning critical thinking and analysis, and public speaking and argumentation skills amongst students via a variety of approaches. Students undergo a rigorous selection process to be selected for the debate team, and start their preparation as early as a year before the actual competition. Skills acquired in this whole learning process help our students go a long way in empathizing with people, building their confidence, and expanding their understanding of the world around them.
தீபாவளி (Deepavali)
இந்துக்கள் கொண்டாடும் மிகப் பெரிய கொண்டாட்டமே தீபாவளி என்னும் வகையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து நம் இந்தியப் பண்பாட்டு மரபுடைமையை வெளிக்கொணரும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். வெவ்வேறு இன, கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கெடுக்கும் வண்ணம் நாங்கள் பற்பல வகுப்பு நடவடிக்கைகளையும் இடைவேளை நடவடிக்கைகளையும் நடத்தி வருகிறோம். பொது ஒன்றுகூடல் வேளையில், தீபாவளி நிகழ்ச்சிக்காக நம் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படைப்புகளைத் தயாரிக்கிறோம். மாணவர்களின் திறன்களை வெளிக்காட்ட இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது.
Deepavali is the biggest celebration in the Hindu calendar, and our teachers and students leave no stone unturned in preparing for a dazzling celebration that offers a glimpse into our rich cultural heritage. Aimed at involving our teachers and students from diverse ethnicities, we plan for an array of classroom and recess activities, where they get an opportunity to learn more about our culture and traditions. An assembly programme with stage performance by our very own teachers and students not only offer our school a stunning spectacle, but also provides our students with a platform to showcase their skills. What better way to spread the festive cheer than to take part in the performance!
குழும/தேசிய பகிர்வுகள் (Zonal/ National Presentations)
தமிழ்மொழிப் பாடங்களைக் கற்றல் குறிக்கோள் அடிப்படையில் எடுத்துச் செல்வதில் நாம் அதிக நாட்டம் காட்டுகிறோம். தரமான கற்பித்தல், மாணவர்கள் சிறந்த கற்றல் நிலையை அடைய வழிவகுக்கிறது என்பதில் எங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது. எனவே, நாங்கள் கற்பித்தல் முறைகளில் எங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள கூடிக்கற்றலிலும் பகிர்வுகளிலும் எங்களை ஈடுபடுத்திக்கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக, நாங்கள் தொழில்முறைசார்ந்த வழக்கங்களை செம்மைப்படுத்தும் நோக்கில், கற்றல் கோட்பாடுகளையொட்டிய பாடங்களை வகுப்பில் அறிமுகப்படுத்தி வருகிறோம். இப்பாடங்களை நாங்கள் வடக்குக் குழும நிலையிலும் தேசிய அளவிலும், ஆசிரியர்களிடையே கற்றல் ஆர்வத்தை வளர்க்கும் வண்ணம் பகிர்ந்துகொள்கிறோம். ‘வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி கட்டுரைப் பாடம் நடத்துதல்’, ‘சிறுகதைகளின் வாயிலாகச் சிந்தனை திறன்களை மேம்படுத்துதல்’, ‘தொழில்நுட்பத்தைக்கொண்டு மாணவர்களின் உரையாடல் திறனை மேம்படுத்துதல்’ போன்ற தலைப்புகளில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு, பாடங்களை நடத்தி, அவற்றைப் பகிர்ந்திருக்கிறோம். இவ்வகையில் நம் கற்பித்தல் முறைகள் வளர்ச்சி கண்டுள்ளன.
இதுபோன்ற பல நடவடிக்கைகளில் நாங்கள் எங்கள் மாணவர்களையும் எங்களையும் ஈடுபடுத்திக்கொள்வதன்மூலம், எங்கள் மாணவர்கள் தமிழ்மொழியிலும் நமது கலாச்சாரப் பண்பாடுகளிலும் ஆர்வம் பெற்று திகழ்கின்றனர்.
The Tamil teachers are passionate about our students and are purposeful in what we teach and how we teach. We understand that the quality of instruction is correlational to students’ successful learning. As such, we pursue continuous improvement through collaborative learning and sharing. Over the years, we have sought to enhance our professional practice by implementing lesson studies anchored by educational theories and models in our classrooms. We have also shared best practices at the zonal and national level in a bid to nurture a learning culture amongst the larger teaching fraternity. ‘Using Differentiated Instruction in Composition Writing”, ‘Using Short Stories to Promote Thinking Skills’, and ‘Leveraging Technology to Enhance Learners’ Conversational Skills’ are some of the studies we have engaged in and shared to strengthen our instruction.
“If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.” -Nelson Mandela